Latest Post
8:09 AM
அஜித் படம் குறித்து விளக்கம் அளித்த சுசீந்திரன்
Written By Unknown on Sunday, June 14, 2015 | 8:09 AM
Labels:
CENIMA
8:07 AM
தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் விமான இறக்கைத் தொழில்நுட்பம்
நடுவானில் பறக்கும் போது தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ளக் கூடிய விமான இறக்கை தொழில்நுட்பத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேற்படி இறக்கை தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு குறித்து லண்டனில் இடம்பெற்ற ரோயல் சபைக் கூட்டத்தில் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவால் முன்வைக்கப்பட்டது.
நடுவானில் பறவைகள் விமானங்களில் மோதுவதால், அவற்றின் (விமானங்களின்) இறக்கைகள் சேதமடைந்து அவை விபத்துக்குள்ளாவது வழமையாகவுள்ளது.
இந்நிலையில் விஞ்ஞானிகளால் மூன்று வருட கால ஆராய்ச்சியையடுத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பமானது, நடுவானில் பறக்கும் போது விமானத்தின் இறக்கை சேதமடைந்தால் சேதமடைந்த பகுதிக்குள் சுயமாக காபன் நாரை கசியச் செய்து பின்னர் அதனை வன்மையாக்குகிறது. இதனால் விமானத்தின் இறக்கையின் சேதமடைந்த பகுதி உடைந்து விழுவது தடுக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் சுயமாக சீரமைக்கக் கூடிய நகப் பூச்சுகள், பந்தாட்ட மட்டைகள் என்பவற்றின் உருவாக்கத்தை சாத்தியமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Labels:
TECHNOLOGY
8:05 AM
ஓடும் பஸ்ஸில் பாய்ந்த மின்சாரம் : 25 பேர் பரிதாபமாக பலி
ராஜஸ்தானில் பஸ் மீது உயரழுத்த மின்கம்பிப அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 25 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் வழியாக பயணிகளை நிரப்பிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.அந்த சமயம் எதிர்பராத விதமாக சாலையின் குறுக்கே சென்ற உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
இதனால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதில் பயணித்த 25 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
தீக்காயம் அடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அனைவரும் திருமண வீட்டைச்சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
World
8:03 AM
நானே ராஜா: கிறிஸ் கெய்ல்
டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா என மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,மக்கள், என்னை டி20 கிரிக்கெட்டின் ராஜா என்று புகழ்கிறார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்சதங்கள் அடித்துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்களும்கூட அடித்துள்ளேன். அதனால், சகல வகை கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா.
டெஸ்ட் போட்டி என்பது அற்புதமானது. உங்களுடைய மனநிலையைப் பரிசோதிக்கும். டி20 கிரிக்கெட்டால் பல புதிய ரசிகர்கள் இந்த விளையாட்டுக்குக் கிடைத்திருக்கிறார்கள். ஆகவே டி20 கிரிக்கெட்டையும் நாம் தொடரவேண்டும். டி20 பிடிக்காதவர்கள் டெஸ்ட் போட்டிகளைப் பார்த்துக்கொள்ளலாம்.
நான் அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆர்வமாகவுள்ளேன். சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகு பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
எனது எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பேன். என்னை அணியில் சேர்க்க ஆர்வமாக உள்ளார்களா என்று பார்ப்பேன். ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
Labels:
Sports

