Headlines News :
Home » » நானே ராஜா: கிறிஸ் கெய்ல்

நானே ராஜா: கிறிஸ் கெய்ல்

Written By Unknown on Sunday, June 14, 2015 | 8:03 AM

டி20 கிரிக்­கெட்­டுக்கு மட்­டு­மல்ல, டெஸ்ட் கிரிக்­கெட்­டுக்கும் நானே ராஜா என மேற்கிந்­தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறி­யுள்ளார்.


இணை­யத்­தளம் ஒன்­றுக்கு அவர் அளித்த பேட்­டியில் கூறி­யுள்­ள­தா­வது,மக்கள், என்னை டி20 கிரிக்­கெட்டின் ராஜா என்று புகழ்­கி­றார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்­கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்­ச­தங்கள் அடித்­துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்­க­ளும்­கூட அடித்­துள்ளேன். அதனால், சகல வகை கிரிக்­கெட்­டுக்கும் நானே ராஜா.
டெஸ்ட் போட்டி என்­பது அற்­பு­த­மா­னது. உங்­க­ளு­டைய மன­நி­லையைப் பரி­சோ­திக்கும். டி20 கிரிக்­கெட்டால் பல புதிய ரசி­கர்கள் இந்த விளை­யாட்­டுக்குக் கிடைத்­தி­ருக்­கி­றார்கள். ஆகவே டி20 கிரிக்­கெட்­டையும் நாம் தொட­ர­வேண்டும். டி20 பிடிக்­கா­த­வர்கள் டெஸ்ட் போட்­டி­களைப் பார்த்­துக்­கொள்­ளலாம்.
நான் அதிக சர்­வ­தேசப் போட்­டி­களில் விளை­யாட ஆர்­வ­மா­க­வுள்ளேன். சொந்த ஊருக்குத் திரும்­பிய பிறகு பயிற்­சி­யாளர் மற்றும் கிரிக்கெட் சபை­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன்.
எனது எதிர்­கா­லத்தைப் பற்றி விவா­திப்பேன். என்னை அணியில் சேர்க்க ஆர்­வ­மாக உள்­ளார்­களா என்று பார்ப்பேன். ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. rajh - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger