Home »
CENIMA
» அஜித் படம் குறித்து விளக்கம் அளித்த சுசீந்திரன்
அஜித் படம் குறித்து விளக்கம் அளித்த சுசீந்திரன்
என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து தற்போது அஜித் சிவா இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லக்ஷமி மேனன், சூரி, கபீர் கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்க இருக்கிறார் என்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இச்செய்தி குறித்து இயக்குனர் சுசீந்திரன், அஜித் சார் படம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவருடன் பணிபுரிய விரும்புகிறேன், அவ்வாறு நடைபெற்றால் உங்களுடன் முதலில் பகிர்ந்துகொள்கிறேன் என்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment